Sunday, March 20, 2011

லிபியாவில் போர் மூளும் அபாயம்!

E-mail அச்செடுக்க
ஐ.நா.பாதுகாப்புப் பேரவை, லிபியா இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் உள்நாட்டுப் போர் நிறுத்தம் அறிவித்தார் அதிபர் கர்னல் கடாஃபி. ஆனால், லிபியா  அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறது என்று வரும் செய்திகளையடுத்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட நேட்டோ படைகள் தயாராகின்றன.

"பென்காசி நகரை கைப்பற்றச் செல்லும் தனது படைகளைக் கர்னல் கடாஃபி நிறுத்த வேண்டும். அஜ்டாபியா, மிஸ்ராட்டா, ஜாவையா ஆகிய நகரங்களில் இருந்து படைகளைத் திரும்பப்பெற வேண்டும். அந்த நகரங்களுக்கு குடி நீர், மின்சாரம், எரிவாயு ஆகியன தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்றும் ஐ.நா கூறியது.

லிபியா நாட்டு மக்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த எப்படிப்பட்ட நேரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதை முடிவு செய்ய பிரான்ஸ் தலைநகர் பாரிசில், அந்நாட்டு அதிபர் சர்கோசி தலைமையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர். இக்கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனும் கலந்துகொள்கிறார்.

"கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட லிபியா நாட்டு இராணுவம், தங்களுடைய முகாம்களுக்குத் திரும்ப லிபிய அரசு உத்தரவிட வேண்டும்" என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment